காந்தியின் தத்துவங்களை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்
மேட்டுப்பாளையம் : காந்தியின் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என ஆன்மீக மற்றும் சமுதாய சொற்பொழிவாளர் காரை மனோகரன் பேசினார்.தேச பக்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில், காரை மனோகரன் பேசுகையில், நாம் அனைவரும் காந்திய வழியை பின்பற்ற வேண்டும். காந்தியின் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். நம் நாடு வல்லரசாக அனைவரும் பாடுபட வேண்டும். குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் மதுபாட்டில்களை வீசக்கூடாது. சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கக் கூடாது. மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இவ்வாறு நடந்து கொண்டால் அதுவும் தேசபக்திதான் என்றார்.