உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பஸ் கண்டக்டர் கொலை? கண்டித்து உறவினர்கள் மறியல் முயற்சி

தனியார் பஸ் கண்டக்டர் கொலை? கண்டித்து உறவினர்கள் மறியல் முயற்சி

புவனகிரி: புவனகிரி அருகே இறந்து கிடந்த தனியார் பஸ் கண்டக்டர் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேத்தியாத்தோப்பு அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தின் பின்புறம் செல்லும் முரட்டு வாய்க்காலில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. தகவலின்பேரில், மருதுார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அதில், அந்த வாலிபர் பின்னலுார் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாபு, 21; என தெரிந்தது. தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த பாபு, கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று இறந்து கிடந்துள்ளார்.இதையறிந்து பாபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பாபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுாரில் நேற்று மாலை 5:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனை தொடர்ந்து 6:10 மணியளவில் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை