உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

குள்ளஞ்சாவடி: அரசுப்பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்ததுகுள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம், நேற்று நடந்தது. இதில் வழுதலம்பட்டு ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியில் ஆசிரியர்-மாணவர் உறவு, மாணவர் இடைநிற்றல், கற்றல் திறன் மேம்பாடு பிரச்னைகளை கையாள்வதில் பெற்றோர் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி