உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவிளங்கேஸ்வரர் கோவில் வருஷாபிேஷக விழா

திருவிளங்கேஸ்வரர் கோவில் வருஷாபிேஷக விழா

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி திருவிளங்கேஸ்வரர், விளங்கநாயகி அம்மன் கோவில் வருஷாபிேஷக விழா நடந்தது.சேத்தியாத்தோப்புஅருகே உள்ள விளக்கப்பாடி கிராம விழல் ஏரியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லிங்கமாக இருந்த திருவிளங்கேஸ்வரர்கோவில் பக்தர்கள் முயற்சியால் கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிேஷகம் நடந்து நேற்றுடன் ஒராண்டு முடிந்த நிலையில் வருஷாபிேஷகம் நடந்தது.முன்னதாக காலை 8.00 மணியளவில் கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், திருவிளங்கேஸ்வரன், விளங்கநாயகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9.15 மணியளவில் ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசத்திலிருந்து புனித நீரைக் கொண்டு திருவிளங்கேஸ்வரர், விளங்கநாயகி அம்மன், நந்திகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ