உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10ம் வகுப்பு மாணவர் மாயம் விருத்தாசலத்தில் பரபரப்பு

10ம் வகுப்பு மாணவர் மாயம் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மாயமான பத்தாம் வகுப்பு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ராகுல், 15. ஈரோடு அடுத்த அந்தியூர் ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட ராகுல், இரவு 9:00 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையம் வந்து விட்டதாக, வேறொரு நபரின் மொபைல் போனில் தந்தை வேல்முருகனிடம் பேசியுள்ளார்.அதற்கு, தேவங்குடி வழித்தட பஸ்சில் வருமாறு கூறிவிட்டு, ராகுலின் பெற்றோர் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் மகன் வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பள்ளி மாணவரை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, புகார் கொடுக்க வந்த ராகுலின் தாய் கலைச்செல்வி, போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இச்சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ