உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் அரிசி கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது

கடலுார்: பண்ருட்டி அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார், எஸ்.ஐ., சந்தோஷ் தலைமையில் நேற்று முன்தினம் காலை, பண்ருட்டி புதுப்பேட்டையில் கரும்பூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டாடா லோடு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 11 மூட்டையில், ரேஷன் அரிசி இருந்தது. காரில் இருந்த நாமக்கல் மாவட்டம் நரியாங்கிணறுபட்டியை சேர்ந்த பழனி மகன் ரவிச்சந்திரன் 35; வேலுார் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் திருமூர்த்தி 52; ஆகியோரிடம் விசாரித்ததில், கிராம பகுதிகளில் சென்று ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.இது குறித்து கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்திய ரவிச்சந்திரன், திருமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி