உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.காட்டுக்கூடலுார், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சிந்துஜா, 36; வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் அங்கிருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சிந்துஜாவை கைது செய்தனர்.அதே போல் பண்ருட்டி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த விமல்ராஜ், 40; என்பவர் வீட்டிலிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை