| ADDED : ஜூன் 22, 2024 04:45 AM
கடலுார், : விருத்தாசலம் அருகே 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.கடலுார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றனாய்வுத்துறை சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, கண்ணன், ஏட்டுகள் முத்துக்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் புது கூரைப்பேட்டையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த மகேந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் என்ற வாகனத்தை சோதனை செய்தபோது 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, டிரைவர் விளாங்காட்டூர் ஆனந்த், 27. மற்றும் உடன் வந்த பூதாமூர் பிரவீன்குமார், 27. ஆகியோரை கைது செய்து, போலீசார் விசாரித்தனர்.விருத்தாசலம், புது கூரைப்பேட்டை, பொன்னேரி ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, விளாங்காட்டூரை சேர்ந்த தனுசுராஜ், என்பவரிடம் கொடுப்பதாக கூறினர். அந்த அரிசியை அவர் கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.இதையடுத்து, ஆனந்த், பிரவீன்குமார், தனுசுராஜ் மீது கடலுார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றனாய்வுத்துறை வழக்கு பதிந்து ஆனந்த், பிரவீன்குமாரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தனுசுராஜை தேடி வருகின்றனர்.