உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாயான சிறுமி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை 

தாயான சிறுமி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை 

கடலுார்:சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ், 23, தொழிலாளி. இவர், 2018ல், 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.புத்துார் போலீசார், ராஜேேஷ கைது செய்து, அவர் மீது கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்தது.நீதிபதி லட்சுமிரமேஷ் வழக்கை விசாரித்து, ராஜேஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அரசு நிதியில், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை