| ADDED : ஜூன் 26, 2024 02:24 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.விருத்தாசலம் அரசு கலைக்கல்லுாரியில், 2024- 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மே மாதம் 29ம் தேதி துவங்கி, ஜூன் 13 வரை நடந்தது.அதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் 24ம் தேதி துவங்கியது. நாளை 27ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடந்த கலந்தாய்வில், பி.காம்., பி.பி.ஏ., துறைகளுக்கான கலந்தாய்வு, முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார்தலைமையில் நடந்தது. இதில், கலந்து கொண்ட மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள்கலந்துகொண்டனர்.