உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.32 லட்சத்தில் நெல் குடோன் கோமங்கலத்தில் தீவிரம்

ரூ.32 லட்சத்தில் நெல் குடோன் கோமங்கலத்தில் தீவிரம்

விருத்தாசலம்:கோமங்கலம் ஊராட்சியில் 32 லட்சம் ரூபாயில் நெல் கொள்முதல் நிலைய குடோன் கட்டும் பணி தீரவிமாக நடக்கிறது.விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில், தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலைய குடோன் செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு குடோன் வசதியின்றி மழை காலங்களில் தார்பாய் மூடி, நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டது.இது குறித்து ஊராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று, 32 லட்சம் ரூபாயில் நெல் கொள்முதல் நிலைய குடோன் கட்டுவதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அனுமதி அளித்தார். அதன்பேரில், குடோன் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். இதனை, ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் பார்வையிட்டு, பணிகளை தரமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்