உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்பு கட்டையில் கார் மோதி 4 பேர் படுகாயம்

தடுப்பு கட்டையில் கார் மோதி 4 பேர் படுகாயம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே நான்கு வழிச்சாலை தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.ஆந்திரா மாநிலம் நெல்லுார் தெலுங்கா தெருவை சேர்ந்தவர் பிருத்திவி, 25; இவரது, மனைவி சகுந்தலா, 22; மற்றும் நண்பர்கள் ஸ்ரீ காந்த், 27; ஆகியோர் ஹூண்டாய் கிரிட்டா காரில் நெல்லுாரியில் இருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். காரை, நெல்லுரை சேர்ந்த சோனுகுமார், 26; ஓட்டிச்சென்றார்.கார், பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இந்த விபத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்து, சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ