உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலச்சரிவில் பாதித்தோருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி

நிலச்சரிவில் பாதித்தோருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி

விருத்தாசலம், : கேரள மாநிலம்,வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி சார்பில்,கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்து.விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த் ஆகியோர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை,ஆர்.டி.ஓ.,சையத் மெஹ்மூத்திடம் வழங்கினர்.அப்போது, டி.எஸ்.பி.,ஆரோக்யராஜ், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர்செல்வமணி, கழுதுார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் வெங்கடேசன்,வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், மாநில துணைத் தலைவர் பழமலை, அரிமா சங்க தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர்கள் முத்து நாராயணன், கே.எஸ்.ஆர்., பள்ளி நிர்வாக இயக்குனர்ரஞ்சித், பொருளாளர் ரகுராமன், சபாநாதன், ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முத்துசாமி, துணை செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்