உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்

வேன் கவிழ்ந்து விபத்து விருதையில் 9 பேர் தப்பினர்

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த 9 பேர் தப்பினர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒருவால் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று விருத்தாசலம் வழியாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு வேனில் சென்றார். நேற்று காலை 9:00 மணியளவில் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமம் அருகே வேன் சென்றபோது,முன்னால் சென்ற ஜீப் மீது மோதாமல் இருக்க, வேன் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி வேன் சாலையோரம் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 பேரும் லேசான காயதத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் காயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி