உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் விளையாட்டு திடல் நிறைவேறாத 20 ஆண்டு கோரிக்கை

பண்ருட்டியில் விளையாட்டு திடல் நிறைவேறாத 20 ஆண்டு கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரில் விளையாட்டு மைதானம் ஏதும் இல்லை.இதனால் இளைஞர்கள், பொதுமக்கள் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய அளவிலான மேடு பள்ளமாக உள்ள இடத்தில் விளையாடி வருகின்றனர்.பள்ளியில் காலை, மாலையில் வேலையோடு பூட்டிவிடுவதால் சீருடை பணியாளர்கள் உடல் தேர்வுக்கு தயாராக, கடலுார் மஞ்சை நகர் மைதானத்திற்கு இளைஞர்கள் செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு இடம் இல்லாததால் திருவதிகை வீரட்டானேஸ்வரர் மாடவீதி, சாலையோரங்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலையோரம் செல்வதால் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளாக, பண்ருட்டி நகரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராகவும் உள்ள நிலையில் பண்ருட்டி நகர மக்களின் பிரதான கோரிக்கையான விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி