| ADDED : ஜூலை 30, 2024 11:34 PM
பிறந்தநாள் கொண்டாடாத்திற்கு, வீதிக்கு வீதி பேனர் வைப்பது சமீப காலமாக பேஷனாகிவிட்டது. நாகரீக வளர்ச்சிககேற்ப தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டங்களும் மாறிவிட்டது. இளைஞர்கள் ஒன்றாக கூடி, கேக் கெட்டுவது, வெடி வெடிப்பது என உற்சாகமாக கொண்டாடி வருகிறது.இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் சமீப காலமாக பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துவருகிறது.மெட்ரோ சிட்டிகளில் நடக்கும் இச்செயல், சமீபகாலமாக விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கிறது.தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி, அதன் மீது கேக் வைத்து வெட்டி, ராட்சத ராக்கெட்டுகளை பறக்கவிட்டு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். அப்போது, அவ்வழியே செல்வோர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டால், வாழ்த்துக்களை பகிருகின்றனர். மாறாக எதிர்த்து பேசினால், அவர்களை தாக்குவது போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. விருத்தாசலத்தில் சமீபத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையில், இதுபோன்ற பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. அப்போது விடப்படும் ராட்சத ராக்கெட்டுகள், புதிதாக போடப்பட்ட ைஹமாஸ் விளக்குகளை பதம் பார்க்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.எனவே, இதுபோன்ற செயல்களை ஆரம்பத்தலேயே தடுக்க, இரவு நேரங்களில் பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.