உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி

தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி

விருத்தாசலம்::விருத்தாசலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கடந்த கல்வியாண்டில் படித்த பிளஸ் 2 மாணவியிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் எடில்பர்த் பெலிக்ஸ், 40, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை, மாணவர் ஒருவர் ரகசியமாக மொபைல் போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது, அந்த வீடியோ வெளியானது. அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை திரண்டு வந்து, பள்ளியில் இருந்து தப்பியோட முயன்ற தலைமை ஆசிரியரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஓராண்டுக்கு முன், இதே பள்ளியில் வேறொரு ஆசிரியர் ஒருவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை