மேலும் செய்திகள்
விரட்டிய மகன்; தாய் புகார்
03-Sep-2024
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு, மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை, 70; என்பவர், தனது மகன் கூலித் தொழிலாளி செந்தில், 45; என்பவருடன் மனு அளிக்க வந்தார். அவரது பையை போலீசார் சோதனை செய்ததில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது.போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அவரது கணவர் இறந்தபோது, தனது மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நபர், அவரது பெயருக்கு பட்டா பெற்றுள்ளார் என்றும், போலி ஆவணங்கள் மூலமாக பட்டா பெற்ற அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து எனது பெயருக்கு மாற்ற மனு அளிக்க வந்தது தெரிந்தது. பின், அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.
03-Sep-2024