உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் திருவிழாவிற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்: போலீஸ் குவிப்பு

கோவில் திருவிழாவிற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்: போலீஸ் குவிப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கோவில் திருவிழா நடத்த ஒரு தரப்பினர்எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விழா துவங்கியது.பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவில்உள்ளமுத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதில் கடந்த 1996ம் ஆண்டுஇருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், விழா நடத்தப்படாமல் இருந்தது.பின்னர், 2016ல் இருதரப்பினரும் சுமூகமாக பேசிவிழாவை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில் முதல் நாள்உற்சவத்தை பொது விழாவாக நடத்தஒன்றிய கவுன்சிலர் தனபதி கூறினார். அதற்கு, முன்னாள் ஊராட்சி தலைவர்ஹேமமாலினிபாபு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து,பாரம்பரியப்படி முதல் நாள் உற்சவத்தை நாங்கள்தான் நடத்துவோம் என்றதால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் விழா நடத்த தாசில்தார் தடை விதித்தார்.இதுதொடர்பாக ஒன்றிய கவுன்சிலர் தனபதிசென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் நாள் உற்சவத்தை அனைத்து தரப்பினரும் இணைத்து நடத்தவும், விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும்உத்தரவிட்டார்.திருவிழாவிற்கு கடந்த 17ம் தேதி நடந்த பந்தகால் நடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி தலைவர் தரப்பினர்கருப்புகொடி காட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.நேற்று முதல் நாள் உற்சவமான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி., பிரபாகரன் மேற்பார்வையில் டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் ஊராட்சி தலைவர் தரப்பினரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் மேலிருப்பு கிராமத்தில் பதட்டம் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை