உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை சந்திப்பில் பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி

சாலை சந்திப்பில் பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி

கடலுார் : கடலுாரில் சாலை சந்திப்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டித் தெரு மற்றும் பிடாரி அம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் தார் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலை சந்திப்பு பகுதியில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ