உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சில்வர் பீச்சை மேம்படுத்த கமிஷனரிடம் கோரிக்கை

சில்வர் பீச்சை மேம்படுத்த கமிஷனரிடம் கோரிக்கை

கடலுார்: கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் அனைத்து வர்த்தக சங்கத்தினர், புதிய மாநகராட்சி கமிஷனருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கடலுார் மாநகராட்சி புதிய கமிஷனராக அனு நேற்று பொறுப்பேற்றார். இவருக்கு, கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், தலைவர் துரைராஜ் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது, கடலுார் சில்வர் பீச்சை, சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். இதனால் கடலுாருக்கு ஏராளமான வருவாய் கிடைக்கப்பெறும். அருகில் புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கடலுாருக்கு கவரும் விதமாக இந்த கடற்கரை அமைய வேண்டும் என துரைராஜ் கூறினார். அதற்கு, அனைவரும் சரியாக வரி செலுத்துங்கள் என கமிஷனர் அனு கூறியுள்ளார். அப்போது, கண்டிப்பாக அனைவரும் வரி செலுத்தி, உறுதுணையாக இருப்போம் என துரைராஜ் கூறினார்.துணைத் தலைவர் பட்டேல் மற்றும்மாவட்ட இணை செயலாளர் சதீஷ்,நகர இணை செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை