உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.டி.எம்.,கார்டை மாற்றிக்கொடுத்து மூதாட்டியிடம் ரூ.46 ஆயிரம் அபேஸ்

ஏ.டி.எம்.,கார்டை மாற்றிக்கொடுத்து மூதாட்டியிடம் ரூ.46 ஆயிரம் அபேஸ்

திட்டக்குடி: திட்டக்குடியில் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்து, மூதாட்டியிடம் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி காசியம்மாள்,62. இவர், நேற்று முன்தினம் மதியம், திட்டக்குடி இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில் தனது மகன் அறிவழகன் என்பவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க ஏ.டி.எம்.,கார்டுடன் வந்தார். அப்போது அங்கு அருகிலிருந்த வாலிபர் ஒருவரிடம் ஏ.டி.எம்.,கார்டை கொடுத்து பணத்தை எடுத்து தரும்படி கூறியுள்ளார். அந்த வாலிபர் பத்தாயிரம் பணத்தை எடுத்துக்கொடுத்தார். அதன்பிறகு அந்த வாலிபர், மூதாட்டியின் ஏ.டி.எம்.,கார்டுக்கு பதிலாக மற்றொரு கார்டை மாற்றிக் கொடுத்தார். இதையறியாத காசியம்மாள், ஏ.டி.எம்.,கார்டை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். நேற்று காலை அந்த வங்கிக் கணக்கிலிருந்த 46ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அந்த மர்ம நபர்கள் திருடியுள்ளனர். வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்ட பின்பே ஏ.டி.எம்.,கார்டு மாறிப்போன விவகாரம் காசியம்மாளுக்கு தெரியவந்தது. புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு மோசடி வாலிபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ