உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளையமாதேவியில் தொடரும் விபத்துக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

வளையமாதேவியில் தொடரும் விபத்துக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவியில் தொடரும் வாகன விபத்துக்களை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு அடுத்த வளையாதேவி சாலையில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்கத்திற்கு பிறகு அதிக வாகனங்கள் போக்குவரத்து காரணமாக சாலை விபத்துக்கள் தொடர் காதையாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.நேற்று வளையமாதேவி பஸ்நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்ற முத்தையன் மீது கார் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த வளையமாதேவி மக்கள் நேற்று காலை 10.30 மணியளில 100க்கும் மேற்பட்டோர் திரண்டு பஸ்நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்த மக்களை சமாதானம் செய்தனர். அப்போது பொதுமக்கள் கடந்த 5 ஆண்டுகளாக வாகன போக்குவரத்து அதிகரித்து நெய்வேலி வழியாக செல்லும் வாகனங்கள் கடலுார் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடி உள்ள காரணத்தால் இந்த சாலையில் வருகின்றனர்.பரங்கிப்பேட்டையிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள் அனைத்து அதிக வேமாக செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் அதிகளவு விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஆகவே பேரிகார்டு, அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.போலீசார் பஸ் நிறுத்தம் அருகே பேரிகார்டு வைத்ததை தொடர்ந்து 11.00 மணிக்கு சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் , புவனகிரி பரங்கிப்பேட்டை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ