| ADDED : மே 08, 2024 11:46 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 166 பேர் தேர்வெழுதினர். இதில் மாணவி திவ்யா ஸ் 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழில் 98, ஆங்கிலம் 95, கணிதம் 100, இயற்பியல் 99, வேதியியல் 99, உயிரியல் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹிலாரி ரீஜா, 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவர் செல்வநாதன் 583 பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.பள்ளியில், 36பேர் தனித்தனி பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10 பேர் 570 மேல் கூடுதல் மதிப்பெண்களும், 35 பேர் 550 க்கு மேல் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.