உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி நிர்வாகிகள் மீது நடவடிக்கை; இந்திய கம்யூ., கோரிக்கை

மாஜி நிர்வாகிகள் மீது நடவடிக்கை; இந்திய கம்யூ., கோரிக்கை

விருத்தாசலம் : கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூ., கட்சியினர் டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தனர்.இந்திய கம்யூ., விருத்தாசலம் வட்டக்குழு வேட்டக்குடி அறிவழகி, பேரளையூர் வெங்கடேசன், மணக்கொல்லை குணசேகரன், பூண்டியாங்குப்பம் கணேசன் ஆகியோர் கட்சியில் இருந்து, கடந்த மாதம் 30ம் தேதி நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள், கட்சிக்கு எதிராக அவதுாறு போஸ்டர் ஓட்டுவது, சமூக வலைதளங்களில் கட்சி நிர்வாகிகள் மீது அவதுாறு பரப்புவதாக, இந்திய கம்யூ., நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது தொடர்பாக, மாவட்ட செயலாளர் துரை தலைமையில் வட்ட பொறுப்பு செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று இரவு மனு கொடுத்தனர்.இந்த சம்பவத்தால், டி.எஸ்.பி., அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை