உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்பனையில் தொடர்பு இருந்தால் நடவடிக்கை

கஞ்சா விற்பனையில் தொடர்பு இருந்தால் நடவடிக்கை

கடலுார்: கஞ்சா விற்பனையில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் பேசினார்.கடலுார் வளர்ச்சி மன்ற கூடத்தில் மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டதிட்டக்குழு அலுவலர் திருமாறன் தலைமை தாங்கினார். திட்டக்குழு அலுவலர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசினார். அனைத்துத் துறை அலுவலர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், திட்டக்குழு உறுப்பினர் நடராஜன் பேசுகையில், 'கடலுார் அண்ணா நகரில் ஆஸ்பெட்டால் ஷீட் போடப்பட்டு அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால்மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை புதுப்பிக்க வேண்டும்' என்றார்.இதற்கு கலெக்டர்'அங்கன்வாடி மையம் புதிதாக கட்டுவதற்கு தனியாக நிதி ஒதுக்குவது கிடையாது. எம்.எல்.ஏ.,க்கள் நிதி, சி.எஸ்.ஆர்., நிதி பெற்றுத் தந்தால் புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாவட்டத்தில் 5 அங்கன்வாடி மையங்கள் புதிதாகவும், 5 ் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஒரு மாதத்தில் துவங்கும்' என்றார்.திருமாறன் பேசுகையில், 'பெண் குழந்தை பாலின விகிதத்தை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். கலெக்டர் பேசுகையில், 'பெண் குழந்தை பாலினி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.திட்டக்குழு உறுப்பினர் அமுதவல்லி பேசுகையில், 'பெண்ணாடம் பகுதியில் கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்றார். கஞ்சா என்பது சமுதாயம் சார்ந்த பிரச்னையாகும். இதற்கு அரசு மற்றும் அதிகாரிகள் மீது குறைக் கூடாது. போதை பழக்கத்திற்கு பிள்ளைகள் ஆளாகமல் இருக்க அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.கஞ்சா விற்பனை தொடர்பாக காவல் துறைக்கு 74188 46100 என்ற எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்திற்கு 90807 31320 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். கஞ்சா விற்பனையில் அதிகாரிகள் மீது தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி