உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்திற்கு கூடுதல் ஓட்டு இயந்திரம்

விருத்தாசலத்திற்கு கூடுதல் ஓட்டு இயந்திரம்

விருத்தாசலம் : விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு கூடுதலாக 343 ஒட்டு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள 286 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான 343 பேலட் யூனிட், 343 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 371 ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் விவிபாட் சாதனங்கள், கடந்த மாதம் 23ம் தேதி வந்தது. அவை, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டன.ஒரு பேலட் யூனிட்டில் 15 வேட்பாளர்கள், நோட்டா உட்பட 16 பெயர்கள், சின்னங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். தற்போது, கடலுார் தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானது. இதனால், லோக்சபா தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் கூடுதலாக பேலட் யூனிட் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, விருத்தாசலம் தொகுதிக்கு 343 பேலட் யூனிட்டுகள் நேற்று முன்தினம் இரவு வந்திறங்கின.அவற்றை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சரிபார்த்து, ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை