| ADDED : ஆக 13, 2024 05:32 AM
புவனகிரி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க ஒன்றிய செயலாளர் நெடுஞ்சேரலாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாயவேல், கனகராஜ், ராஜா, ரெங்கநாதன், சுமதி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நுாறு நாள் வேலையில் தினக்கூலியாக ரூ. 319 முழுமையாக வழங்குவதுடன், வேலை நாட்களை 200ஆகவும், தினக்கூலியை ரூ. 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில குழு செல்லையா, ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் முருகன், தர்மதுரை, சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.