உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஈட்டி எறிதலில் சாதிக்கும் மாணவர்

ஈட்டி எறிதலில் சாதிக்கும் மாணவர்

கடலுார், : நெய்வேலி என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் பிரதீப். என்.எல்.சி., விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கிறார். சென்னையில் குடியரசு தினத்தையொட்டி, பள்ளிக் கல்வித் துறை நடத்திய, 1மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று, ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.இந்தாண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று 7வது இடம் பிடித்தார். சென்னையில் மாநில அளவில் நடந்த ஓப்பன் ஜூனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம், கரூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். இவருக்கு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஊக்கமளித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் பிரதீப் கூறுகையில், 'சிறு வயது முதலே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதன் வெளிப்பாடாக ஈட்டி எறிதல் போட்டியை தேர்வு செய்து, சிறந்த பயிற்சியை மேற்கொண்டு மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்