உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழில் சாதித்த மாணவி; முதல்வர் பாராட்டு

தமிழில் சாதித்த மாணவி; முதல்வர் பாராட்டு

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிற்றரசி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்னுக்கு, 488 பெற்று சாதனை படைத்தார். அத்துடன், தமிழ், பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றும் சாதித்தார். மாநில அளவில் அரசு பள்ளிகளில் தமிழில் 2 மாணவிகள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்களில் சிற்றரசியும் ஒருவர். அதையடுத்து, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த விழாவில், மாணவி சிற்றரசியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி, சான்றிதழ் மற்றும் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். சாதனை மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளி செயலாளர் மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி