| ADDED : ஏப் 26, 2024 05:37 AM
நெய்வேலி: நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் பண்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.என்.எல்.சி., சட்டத்துறை முதன்மை பொது மேலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஜவகர் கல்லுாரி செயலாளர் ராஜ்குமார், என்.எல்.சி., மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர்கள் பங்கஜ்குமார், அறிவு முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கிரிஸ்டோபர் தனராஜ் வரவேற்றார்.உடற்கல்வி இயக்குனர் பிரபு ஆண்டறிக்கை வாசித்தார். என்.எல்.சி., சுரங்கங்களின் செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் பேசினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் அசோக்குமார், மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி தாரணி மவுலி, என்.எல்.சி., கல்வித்துறை துணை பொது மேலாளர் பிரபாகரன், முதன்மை மேலாளர் அருளழகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.உடற்பயிற்சி இயக்குனர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.