உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

பண்ருட்டி : பண்ருட்டியில் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மனித கடத்தல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கடலூர் மாவட்ட சட்ட பணிகள் குழு ஆணைக்குழு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரிமுத்து செங்கல் சூளையில் நடந்தது.முகாமிற்கு வக்கீல் விமல்ராஜ் வரவேற்றார். டி.எஸ்.பி.பழனி, தாசில்தார் ஆனந்த், மகளிர் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் ராதிகா, மாவட்ட தொழில் உதவி இயக்குனர் மகேஸ்வரன் ,சமூக ஆர்வலர் ராம்குமார், முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட சட்ட பணிகள் குழு நீதிபதி அன்வர்சதாத் சிறப்புரையாற்றினார்.செங்கல் சூளை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ