உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர்கள் பதவி வகித்து வந்தனர். இறுதியாக காந்திராஜ் கமிஷனராக பதவி வகித்து வந்தார். முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனு என்பவரை, கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.இவர், தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது கணவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் கலெக்டராக கடந்த 19ம் தேதி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கடலுார் மாநகராட்சி அந்தஸ்து பெற்று, முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் அதிகாரிகள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜூலை 23, 2024 11:09

அதிகாரிகள் ஏன் ஷாக் ஆவுறாங்க? ஊழலைக் கண்டுபுடிச்சு பெண்டு நிமிர்த்திருவாங்க என்ற பயத்தாலா? நோ நோ... ஆரம்பத்தில் எதிர்க்கும் அதிகாரிகளை மடக்கி அவர்களையும் ஊழலில் ஆழ்த்தும் திறனுள்ளது திராவிடியால்ஸ் மாடல் .....


Prakasam Srinivasan
ஜூலை 23, 2024 10:36

It is excellent and most welcome. Her Services will be done honestly and sincerely and help the Public grievances as per legally. Long LIve Mam.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ