உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு

புவனகிரி: புவனகிரி அடுத்த தையாக்குப்பம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புவனகிரி அடுத்த தையாக்குப்பம் தொடக்க பள்ளியில்' தலைமை ஆசிரியராக பணியாற்றிய குமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தலைமை தாங்கினார்.' ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் நல்லமுத்து முன்னிலை வகித்தார். ஆசிரியர் அருள் வரவேற்றார்.' ஆசிரியர்கள் செல்வராசு, வரதராஜன், துரைமணிராஜன், சித்ரா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.ஏற்பாடுகளை மோகன்ராஜ், ஆனந்தபெலிக்ஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியர் அருணகிரிநாதன் நன்றி கூறினார். ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் குமார் ஏற்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ