உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாத்து மேய்த்த சிறுவனை படிக்க வைக்க ஏற்பாடு

வாத்து மேய்த்த சிறுவனை படிக்க வைக்க ஏற்பாடு

புவனகிரி, : புவனகிரி அருகே வாத்து மேய்த்த சிறுவன் விடுதியில் தங்கி படிப்பதற்கு ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.புவனகிரி அடுத்த வடதலைக்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தலைக்குளம் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தார்.இதை கண்ட தலைமை ஆசிரியர், அப்பகுதி ஊராட்சி தலைவர் செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரகணேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், சிறுவனிடம் விசாரித்தனர். இதில் சிறுவன், கடலுார் அடுத்த சாணாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தாய் கடந்த ஓராண்டிற்கு முன் இறந்ததால், வேறு வழியின்றி வாத்து மேய்ப்பது தெரிய வந்தது.அந்த சிறுவனை கூலி வேலைக்கு அழைத்து வந்தவரை எச்சரித்ததுடன், சிறுவனை கல்வித்துறை அதிகாரிகள் மூலம், அரசு விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை