உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜே.சி.பி., டிரைவர் மீது தாக்குதல்

ஜே.சி.பி., டிரைவர் மீது தாக்குதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மு.வீரட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 27. ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவர், கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தில் சாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கோ.மாவிடந்தல் பகுதியைச் சேர்ந்த அறிவு மகன் சூர்யா, நவீன், சரவணன், பார்த்திபன் உள்ளிட்டோர் சாலை பணி சரியில்லை என்று கூறி, செந்தில்குமாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினர்.இதில், படுகாயமடைந்த செந்தில்குமார் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் சூர்யா, நவீன் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி