உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பா.ம.க., பிரமுகரை வெட்டிக் கொல்ல முயற்சி

கடலுார் பா.ம.க., பிரமுகரை வெட்டிக் கொல்ல முயற்சி

திருப்பாதிரிப்புலியூர்:கடலுார், சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்தவர் சிவசங்கர், 43; பா.ம.க., பிரமுகர் மற்றும் வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவர். இவர், நேற்று மாலை, 3:00 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, இரு பைக்குகளில் வந்த நான்கு பேர், திடீரென சிவசங்கரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிவசங்கரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். தொடர்ந்து, சிவசங்கரை கொலை செய்ய முயன்ற மர்ம கும்பலை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மருத்துவமனை எதிரில் மாலை, 5:15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., பிரபு பேச்சு நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, 5:30 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர். பின், மேல் சிகிச்சைக்காக சிவசங்கர், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை