உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி அவதி

தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி அவதி

விருத்தாசலம் : விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.விருத்தாசலம் தாலுகா அலுவல வளாகத்தில் ஜாதி, வருமானம், இருப்பிடம், பட்டா மாற்றம், வட்ட வழங்கல் பிரிவு, ஆதார் கார்டு, தேர்தல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளிலும், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கருவூலம், இசேவை மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயனாளிகள் வந்து செல்கின்றனர்.அதிகாரிகளை சந்திக்க வரும் கிராம பயனாளிகள் ஓய்வெடுக்கும் அறையில் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. மேலும் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாமல் கடும் அவதியடைகின்றனர். அருகிலுள்ள கடைகளில் கட்டணம் செலுத்தி குடிநீர் பெற வேண்டியுள்ளது. இயற்கை உபாதைக்கு தாலுகா அலுவலக பின்பற முட்புதரை, ஆபத்தான நிலையில் பயன்படுத்துகின்றனர். மேலும், தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறையும் செயல்படுகிறது.எனவே, கிராமப்புற பயனாளிகள் நலன் கருதி தாலுகா அலுவலக பின்புறத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கழிவறைகளும், சுகாதாரமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ