உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கடலுார் : கடலுாரில், போலீசார் சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு, போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமை தாங்கினார். டிராபிக் எஸ்.ஐ.,க்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், ஆட்டோ டிரைவர்கள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. மது அருந்திவிட்டு ஓட்டக்கூடாது. சாலைகளில் நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் பயணிகளை ஏற்றி, இறங்க வேண்டும். ஷேர் ஆட்டோக்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே இயக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றனர். சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிரசன்னா மற்றும் கடலுார் பகுதியைச் சேர்ந்த 400 ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி