உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணசாமி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார்: கடலுார் அருகே கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில், சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில், வனகொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா, புள்ளியல் ஆய்வாளர் ரவிசங்கர், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வரக்கால்பட்டு கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கல்லுாரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ மாணவிகளிடம் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் இளங்கோ, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், குணசீலன், டாக்டர் சிவகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை