உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவியருக்கு கிரீடம் அணிவித்து வரவேற்ற அய்யப்பன் எம்.எல்.ஏ.,

மாணவியருக்கு கிரீடம் அணிவித்து வரவேற்ற அய்யப்பன் எம்.எல்.ஏ.,

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவியரை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் விஜயபிரியா, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அய்யப்பன் எம்.எல்.ஏ., மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றார். மேலும், மாணவியரின் தலையில் கிரீடம் அணிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது, அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி