உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

கடலுார்:போலீஸ் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் 466 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.தமிழக போலீஸ் துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் உத்தரவின்படி, மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி.கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றம் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 நபர்கள், செங்கல்பட்டு 56, திருவள்ளூர் 12, விழுப்புரம் 98, கள்ளக்குறிச்சி 13.கடலுார் 71, வேலுார் 33, ராணிப்பேட்டை 44, திருப்பத்துார் 41, மற்றும் திருவண்ணாமலை 77 பேர் என மொத்தம் 466 கள்ளச்சாராயம், கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ