உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., போராட்டம் ஒத்திவைப்பு

பா.ம.க., போராட்டம் ஒத்திவைப்பு

திட்டக்குட : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டுவதை கைவிடக்கோரி பா.ம.க., சார்பில் இன்று (7ம் தேதி) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., (பொ) அழகர்சாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், தாட்கோ நிர்வாக பொறியாளர் அன்புசாந்தி, டி.எஸ்.பி., மோகன் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும், அதுவரை பணியை நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பா.ம.க., வினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை