உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

பண்ருட்டி: பண்ருட்டி சற்குரு நாட்டியாலாயா பரதநாட்டிய நிகழ்ச்சி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு கோவில் முன்னாள் அறங்காவலர் சபாபதி தலைமை தாங்கினார். பிராமணர் சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பரதநாட்டிய மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.ஏற்பாடுகளை பரதநாட்டிய ஆசிரியை சண்முகபிரியா, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ