| ADDED : மே 13, 2024 05:36 AM
புவனகிரி: புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. புவனகிரி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் சிறப்பிடத்தில் தேர்ச்சிப்பெற்றனர். 100 சதவீத வெற்றியை பதிவு செய்தனர். மாணவி யோகேஸ்வரி 495, மதுமிதா 494, பவதாரணி 491 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கணிதத்தில் 27 பேர், அறிவியல் பாடத்தில் 6 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேர் என 37 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தலைமையாசிரியை பழனியம்மாள், உதவி தலைமையாசிரியர் பாலாஜி ஆகியோர் பாராட்டி சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர். பள்ளியின் ஆலோசனை குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் அன்பழகன், பாலச்சந்தர், ஜெகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.