உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி மங்களம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புவனகிரி மங்களம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புவனகிரி: புவனகிரி மங்களம் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கியது.புவனகிரி மங்கலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை பதிவை தக்க வைத்தனர். மாணவிகள் அர்ச்சனா, 591; பிரபாதேவி, 586; பிரியதர்ஷினி,582, மதிப்பெண்கள் பெற்று, சிறப்பிடங்களை பிடித்தனர். மேலும் பாட வாரியாக கணிதத்தில் 8 பேரும், வேதியல் 4, இயற்பியல் 2, கம்ப்யூட்டர் அறிவியலில் 9, உயிரில் பாடத்தில் ஒருவர் என 24 பேர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். சிறப்பிடம் மற்றும் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் தமிழ்மணி, செயலாளர் அங்கையர்கன்னி பாராட்டி சால்வை அணிவித்து, ஊக்கப் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ