| ADDED : மே 02, 2024 11:20 PM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், தமிழ் சங்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு புலவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்குவது. தூய தமிழில் பேசுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி நகர பகுதியில் உள்ள வீதிகளுக்கு தமிழ் பெயர் சூட்ட பேரூராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புலவர் முத்துக்குமரன், சின்னமணி, குப்புசாமி பாண்டியன் இளங்கோவன், மாணிக்கவேல், ராசதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சரவணன் நன்றி கூறினார்.