உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., ஆன்மிக பிரிவு; மத்திய அமைச்சரிடம் மனு

பா.ஜ., ஆன்மிக பிரிவு; மத்திய அமைச்சரிடம் மனு

கடலுார் : வடலுார் சத்தியஞான சபையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென, பா.ஜ., ஆன்மிக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் சந்தித்தார். அப்போது, வடலுார் சத்தியஞான சபை வளாகத்தில் வள்ளலார் சர்வதேச மைய விவகாரம் குறி்த்து ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விவரங்களை தெரிவித்தார்.பின், வள்ளலார் சத்தியஞான சபையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ