| ADDED : மே 30, 2024 05:29 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ம.க., முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஓட்டு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஆறுமுகம், கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர் தங்கர்பச்சான் ஆகியோர் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில், ஓட்டு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி முகவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மாவட்ட அமைப்பு செயலாளர் கயல் ராஜன், மாவட்ட மாணவரணி ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.