உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி பள்ளியில் புத்தகம் வழங்கல்

நகராட்சி பள்ளியில் புத்தகம் வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் திரு.வி.க., நகர் நகராட்சி துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு அரசு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். வட்டார தொடக்க கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, நகராட்சி கவுன்சிலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் லாசர் வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், பள்ளி முதல்நாள் திறப்பையொட்டி, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தகங்களை வழங்கினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் எழிலரசி, உறுப்பினர்கள் ரஹ்மத்துல்லா, ஆசிரியர்கள் சகுந்தலா, சீனிவாசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ